ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை-அமெரிக்கா
ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்த வில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், உக்ரைன் அதன் எல்லையை தாண்டி தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் உக்ரைனின் சுதந்திரத்திற்காக அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் மண்ணில் நடக்கும் தாக்குதலுக்கு பதிலளிப்பதற்காக ஆயுதங்களை வழங்கி வருகிறோம், இதனை அவர்கள் எல்லை தாண்டி பயன்படுத்த அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்று பிரைஸ் கூறினார்.
மேலும் ரஷ்யப் போர்க்களத்தில் கண்டறியப்பட்ட ஹிமார்ஸ் ராக்கெட்டை உக்ரைனுக்கு, அமெரிக்கா வழங்கியது என்ற வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் அறிக்கையையும் நெட் பிரைஸ் மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர், ஜோ பைடனும் இது குறித்து கூறும்போது நீண்ட தூர ஏவுகனைகளை உக்ரைனுக்கு அனுப்புவது ரஷ்யாவுடன், அமெரிக்கா நேரடியாக மோதுவதற்கு சமமாகும் என்று கூறியுள்ளார்.