பூமியை போல் மற்றுமொரு கிரகத்தில் தண்ணீர் – நாசா தகவல் !

Default Image

வாஷிங்டன் : ‘நாசா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கியின் மூலம் கடந்த புதன்கிழமையன்று தொலைதூர கிரகத்தில் தண்ணீர், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ளது. இது அதிக திறன் உடையது. இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஜோ பைடன் வெளியிட்டார்.

பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டு தூரத்தில் வாயு நிரம்பிய வாச்ப்-96 பி என்கிற கோள் ஒன்று சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றிவருகிறது. பால்வெளியில் இருக்கும் ஐயாயிரத்திற்கும் அதிகமான தொலைதூர கோள்களில் வாச்ப்-96 பி என்ற கோளும் ஒன்று.

அந்த வாயு நிரம்பிய கோளில் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் மற்றும் நீர் இருப்பதற்கான அறிகுறியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.இக்கோளின் வெப்பநிலையை 538 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த கோள் குறுகிய சுற்றுப்பாதையுடன், அளவில் பெரியாதாக மற்றும் வீங்கிய வளிமண்டலத்துடன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. முன்பு நடத்திய ஆய்வில் தற்போது கிடைத்த அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோளில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைட், மீத்தேன் வாயுக்களின் அளவுகளை அறிவதற்கும், இந்த கோள் எப்போது, எப்படி, எவ்வாறு உருவானது என கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கிடைத்த தகவல்கள் உதவும் என நாசா தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்