டெஸ்லாவின் மனித உருவ ஆப்டிமஸ் ரோபோ.. எண்ணலாம் பண்ணுதுனு பாருங்க.!

எலோன் மஸ்க், மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ஆப்டிமஸ் ஜெனரேஷன்-2 ரோபோவை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளார்.

Optimus Gen-2

அமெரிக்கா: மனிதனைப் போலவே செயல்படும் ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு மிக அருகில் வந்துவிட்டான் மனிதன். ஆம், அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார்.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ‘We, Robot’ நிகழ்ச்சியில் டெஸ்லாவின் மனித உருவ ‘ஆப்டிமஸ்’ ரோபோக்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த ரோபோ உங்கள் குழந்தைகளைப் பராமரிப்பது, புல்வெளி வெட்டுவது, பானங்கள் வழங்குவது என நீங்கள் எதைச் செய்ய சொன்னாலும் செய்யும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது 20 பேர் அமர்ந்து செல்லும் ரோபோ டேக்ஸி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆப்டிமஸ் ஜெனரேஷன்-2 ரோபோ, இதற்கு முந்தைய ரோபோக்கள் செய்ய முடியாத பல வகையான வேலைகளை இந்த ரோபோட் செய்ய முடிகிறது. முன்பு அது நடக்கவும் பேசவும் மட்டுமே முடியும். முந்தைய மாடலை விட இப்போது புதிய பதிப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Gen 2 ரோபோக்கள் இப்போது அதிக வேகத்தில் செல்ல முடியும். அதன் கை விரல்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அது மனிதர்களைப் போன்றவற்றைத் தொட்டு உணர முடியும். இது தவிர ரோபோவுக்கு பல வகையான அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அட ஆமாங்க… இந்த ரோபோக்கள் கொண்டு வீட்டு உபயோக வேலைகளை நாம் செய்யப் பழக்கலாம்.  உதாரணமாக உணவு விடுதிகளில் பானங்கள் பரிமாறுவது போன்ற வேலைகள் செய்ய வைக்கலாம்.

இது மட்டுமல்லாது தோட்டத்தில் புற்களை களைவது, நாய்களை வெளியே அழைத்துச் செல்வது மற்றும் மளிகை பொருட்கள் வாங்க அனுப்புவது போன்ற செயல்களைச் செய்ய பழக்கப்படுத்தி உபயோகிக்கலாம். பிற்காலத்தில் உங்கள் நண்பனாக அனைவரது வீடுகளிலும் இந்த ரோபோட் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்