எச்சரிக்கை… மூக்கில் ஏற்பட்ட குட்டி பரு…கண்டுகொள்ளாமல் விட்ட பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!

PIMPLE

பொதுவாக பல மனிதர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது சாதாரண ஒன்றுதான் அதனை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை. முகத்தில் மாசு மற்றும் அழுக்கு வெளிப்பாட்டால் பருக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் இருக்கும் 52 வயதான மைக்கேல் டேவிஸ் என்பவருக்கு  மூக்கில் ஏற்பட்ட பரு ஒன்று கொடிய புற்றுநோயின் அறிகுறியாக மாறியது.  கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருடைய மூக்கு பகுதியில் ஏற்பட்ட அந்த பரு சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.

இதனை கண்டுகொள்ளாமல் இருந்த மைக்கேல் டேவிஸ் அந்த இடத்தில் இரத்தம் வருவது நிற்கவில்லை, இந்த காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு (carcinoma) கார்சினோமா எனும் தோல் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மைக்கேல் டேவிஸ்  பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.  தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அவர் வந்துவிட்டதால் விரைவில் குணமடைந்தார். இருப்பினும், ஒருமுறை தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அவருக்கு  மீண்டும் நோயை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

இந்த வகை புற்றுநோய் முதலில் அடித்தள செல்களில் இருந்து தொடங்குகிறது. பழைய செல்கள்  இறக்கும் போது அவை  புதிய தோல் செல்களை உருவாக்குகின்றன. ஆனால் இந்த உயிரணுக்களின் புற்றுநோயை சூரிய ஒளியின் வெளிப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

  • முகம் மற்றும் கழுத்து போன்ற இடங்கள் வெயிலில் படும்போது ஒரு வித எரிச்சல் உணர்வை நீங்கள் உணர்வீர்கள். அந்த இடத்தில் செதில் திட்டுகள் போல ஏற்படும்.
  • தோலில் வெள்ளை அல்லது பழுப்பு நிற கட்டி செதில் திட்டுகள் போல ஏற்படும்.
  • பளபளப்பான தோல் நிறமுள்ள பருக்கள் வரும்
  • வெள்ளை, மெழுகு போன்ற வடு போன்ற புண்கள் வரும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்