மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!

Vladimir Putin

Vladimir Putin : ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடத்தப்பட்ட தேர்தலில், விளாடிமிர் புடின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய நாடாக இருக்கும் ரஷ்யா, சுமார் 15 கோடி மட்டுமே குறைந்த மக்கள்தொகையை கொண்டுள்ளது.

Read More – பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல் காந்தியின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

இதனால், இந்தியாவை போல இல்லாமல், ரஷ்யாவில் அதிபர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்தவகையில், பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கடந்த 1999 முதல் ரஷ்யாவில் மிகவும் சக்திவாந்த தலைவராக இருந்து வருகிறார் விளாடிமிர் புடின்.

Read More – மக்களவை தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிவது எப்படி?

இந்த சூழலில், ரஷ்யாவின் தற்போதைய அதிபராக இருந்து வரும் விளாடிமிர் புடினின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் விளாடிமிர் புடின் உட்பட 4 முனை போட்டி நிலவியது. இருப்பினும், விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்று 5ஆவது முறையாக அதிபராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தலில், விளாடிமிர் புடின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Read More – இரு மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

உக்ரனுடனான போர் மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

அதுமட்டுமில்லாமல் அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற ரஷ்ய வரலாற்றில் இடம்பெற்ற ஜோசப் ஸ்டாலினை விளாடிமிர் புடின் முந்தி சாதனை படைத்துள்ளார். இதனிடையே, புடினின் கடுமையான அரசியல் எதிரியான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த மாதம் ஆர்க்டிக் சிறையில் இறந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்