இந்திய வம்சாவளியைச்சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி.!
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த குடியரசுக்கட்சியைச்சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு 2024 இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் களமிறங்குகிறார். குடியரசுக்கட்சியின் சார்பில் ஏற்கனவே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய-அமெரிக்கரான நிக்கி ஹேலியும் அவருக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்தார்.
தற்போது மற்றொரு இந்திய வம்சாவளியரான விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர்கள் முதலில் தங்கள் கட்சிகளுக்குள் ஆதரவைப் பெற வேண்டும், பின்னர் அவர்கள் இறுதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளரை எதிர்கொள்ள வேண்டும். ஜனாதிபதி ஜோ பிடனும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.