அமெரிக்காவில் இந்து மதம் குறித்த சர்ச்சை கேள்வி.! அமைதியாக பதில் அளித்த விவேக் ராமசாமி.!

vivek ramaswamy

அமெரிக்கா : இந்திய வம்சாவளியாளரும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான விவேக் ராமசாமி சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் விவேக் ராமசாமியிடம், ” உங்களுடைய இந்து மதம் கிறிஸ்தவம் மதத்திற்கு எதிரான மதம் தானே” ? என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ராமசாமி அளித்த பதில் தான் தற்போதைய அமெரிக்கா மற்றும் இந்திய இணையதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த அவருக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் என்னவென்றால் ” இந்து மாதம் நீங்கள் நினைப்பது போன்ற மதம் இல்லை. இந்து மதம் மிகவும் அமைதியான ஒரு மதம்.” என இந்து மதம் பற்றிய கேள்வியை பெரிய அளவில் சர்ச்சையாக்க விரும்பாமல் தன்னுடைய பதில் இவ்வளவு போதும் என மனதில் வைத்துக்கொண்டு அமைதியான முறையில் விவேக் ராமசாமி பதில் அளித்துள்ளார்.

இருப்பினும், விவேக் ராமசாமியிடம் இப்படியான கேள்வி கேட்கப்பட்டது போல, கிறிஸ்தவத்திற்கு எதிராக இதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக இந்த நேரம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டிருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், விவேக் ராமசாமி அளித்த பதிலை பார்த்த துருக்கி, எகிப்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர்  கன்வால் சிபல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பேசிய வீடியோவை வெளியீட்டு ” இந்து மதத்தை ஒரு தீய மற்றும் பேய்த்தனமான மதம் என்று விமர்சித்து பேசுவது இந்தியாவில் நடந்து இருந்தால், சமூக வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சில பொதுநல வழக்குகள் போடப்பட்டிருக்கலாம்.

இந்தியா எவ்வளவு சகிப்புத்தன்மையற்றதாக மாறி உள்ளது என்பதை ஆங்கிலோ-சாக்சன் பத்திரிகைகள் வெளிப்படுத்தியிருக்கும். விவேக் ராமசாமியின் பதில் தற்காப்பு மற்றும் போதுமானதாக இல்லை. அமெரிக்காவில் உள்ள சுவிசேஷ வட்டாரங்கள் இந்திய சமுதாயத்தை கொள்கையற்ற பல்வேறு வழிகளில் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்