Categories: உலகம்

இஸ்ரேல் தலைநகருக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வருகை!

Published by
கெளதம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வருகை தந்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தனி தனியே இஸ்ரேலுக்கு சென்று அலோசனை நடத்தியதோடு, தங்களது முழு ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அந்த வகையில், தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வந்துள்ளார். அங்கு அவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் காஸாவில் பிணைக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இஸ்ரேல் ஏர்போர்ட்டில் இறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசிய இம்மானுவேல் மக்ரோன், போர் நிறுத்தம் முதல் சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்குவது வரை இஸ்ரேலிய அரசாங்கத்துடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதாக தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து 18-வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.

2 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்.!

வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் இஸ்ரேல் மற்றும் ஒரு சில வெளிநாட்டவர் என பலர் பிணைய கைதிகளாக உள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியிலும் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

6 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

7 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

8 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

9 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

10 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

12 hours ago