Viral Videos : கிராமத்தில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள்..!
யானைகள் அட்டகாசம் :
நேபாள எல்லையில் உள்ள பீகாரின் கிஷன்கஞ்சின் தெஹ்காச் தொகுதியின் பைரியா கிராமத்தில் காட்டு யானைகள் சத்தமிட்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மூன்று யானைகள் இடையில் வரும் எதையும் மிதித்துவிடும் வகையில் வேகமாக ஓடுகிறது. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி அசம்பாவிதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்த யானைகளின் பயங்கரம் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
नेपाल से बिहार में घुसे हाथियों का आतंक, खूब मचा रहे उत्पाद..
अब लोगों में डर का माहौल, हाथियों के वजह से घर में छिपने को मजबूर लोग #Bihar pic.twitter.com/rCHVa5jWJY
— News State Bihar Jharkhand (@NewsStateBihar) March 15, 2023
முத்தக்காட்சி :
மும்பையில் ஓம் ரயிலில் காதல் ஜோடி, ஒருவரையொருவர் வெளிப்படையாக முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது காதலி அந்த இளைஞருக்கு முத்தம் கொடுக்கிறார். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இவ்வாறு நடந்து கொள்வது அநாகரீக செயலாகும்.
#Mumbai की लोकल #train का एक वीडियो जमकर वायरल हो रहा है जिसमें एक कपल खुलेआम ट्रेन में ही एक-दूसरे को KISS कर रहा है। #ViralVideos pic.twitter.com/cpoUYnUHzs
— Mradubhashi (@mradubhashi1) March 15, 2023
தரமான பொறி:
மிக பெரிய மலைப்பாம்பு ஒன்று சதுப்பு நிலப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக ஒருவர் கோழியை வைத்து சரியான பொறி ஒன்றை சதுப்பு நிலப்பகுதியில் தயார் செய்துள்ளார். அவர் நினைத்தது போலவே கோழியை சாப்பிட வந்த பாம்பு அவர் வைத்த பொறியில் சிக்கியது. அது எவ்வளவு முயற்சித்தும் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பாம்பு பொறியில் சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Terrifying As Fuck (@TerrifyingAsfuk) March 14, 2023
மின்கட்டணம் வசூல்:
குஜராத் மாநிலத்தில் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கும் மக்களிடம் ‘ரசியோ ரூபாலோ’ பாடலை பாடி மின்விளக்கு கட்டணத்தை செலுத்துமாறு மின்வாரியத்தினர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
પછી કનેક્શન કપાય તો કહેતા નહીં!
રસીયો રૂપાળો ગીત ગાઈને વિજ વિભાગે લોકોને લાઈટબીલ ભરવા કરી વિનંતી#UGVCL #gujarat #ViralVideos #GujaratiNews @UGVCL_official pic.twitter.com/ZdCyefLyYU
— Sanjay ᗪєsai (@rabari26) March 15, 2023