Viral videos : டைவ் அடிக்க முயன்ற பெண்.. காத்திருந்த அதிர்ச்சி..!
அலறவைத்த சுறா மீன்:
பெண் ஒருவர் கடலில் டைவ் அடிக்க முயன்ற போது கடலில் இருந்து சுறா மீன் ஒன்று வாயயை திறந்த படி மேற்பரப்பிற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மயிரிழையில் அந்த பெண் உயிர் பிழைத்துள்ளார்.
Jump in.. pic.twitter.com/cDjayUX3AS
— Wow Terrifying (@WowTerrifying) March 16, 2023
கர்மா இஸ் பூமராங்:
சொகுசு கார் ஒன்றில் பயணம் செய்யும் நபர் குப்பையை ரோட்டில் வீசுகிறார். அப்பொழுது அங்கு சைக்கிளில் வரும் சிறுவன் அந்த குப்பையை மீண்டும் அந்த காருக்குள் வீசி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
For throwing litter on road pic.twitter.com/gMlSbPmI8R
— Instant Karma (@Instantregretes) March 16, 2023
சொன்னபடி கேளு.. மக்கர் பண்ணாதே:
மாடு ஒன்றின் கழுத்தின் மீது கயிற்றை வீசிய நபரை அந்த மாடு ஓடி சென்று முட்டி தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பண்ணை நிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த வித காயம் ஏதும் ஏற்படவில்லை.
Lol ???? pic.twitter.com/W5u3Ltr7Lz
— Top Videos (@TopVideosOnly) March 16, 2023
வழிவிடு .. வழிவிடு .. :
நடுக்கடலில் வேகமாக வரும் பெரிய சொகுசு கப்பல் ஒன்று அதன் பாதையில் குறுக்கிட்ட மற்றொரு கப்பலை மோதும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அசால்ட் ஆக வரும் அந்த பெரிய கப்பல் சிறிய கப்பல் மீது மோதி கடந்து சென்றது.
Damn! ???????? expensive & dangerous pic.twitter.com/1GtPwIOfRS
— Shocking Video (@ShockingVideo_) March 16, 2023
அசாத்திய டிரைவிங் :
சாலையின் குறுக்கே அசால்ட் ஆக வாகனத்தை ஒட்டிச் சென்று,எந்த வாகனத்தையும் இடிக்காமல் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சாலையில் சீறிப்பாய்ந்த அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், வந்து கொண்டிருந்த வாகனங்கள் மீதும் மோதாமல் லாவகமாக தாண்டி சென்றது.
???? pic.twitter.com/hIttU7OswI
— Shocking Video (@ShockingVideo_) March 15, 2023
இயற்கை பயங்கரமானது :
இயற்கை பயங்கரமானது என்பது உண்மைதான் போல. நடுக்கடலில் கொந்தளிக்குக்கும் அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாயும் கப்பல் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடல் அலைகள் சுனாமி வருவது போல கொந்தளிக்கிறது. அப்படியும் ஒரு கப்பல் அந்த அலைகளுக்கு மத்தியில் பயணம் செய்கிறது.
— Nature Is Scary (@Nature1sScary) March 15, 2023
பாதுகாப்பற்ற ஊஞ்சலாட்டம்:
இளம் காதல் ஜோடி ஒன்று ஆபத்தான முறையில் ஊஞ்சல் ஆடுவதை துஷார் ஷிரிவஸ்தவா என்ற நபர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அந்த ஜோடி நிலைகுலைந்து மலை உச்சியிலிருந்து கீழ விழுவது மற்றும் அங்குள்ளவர்கள் கூச்சலிடுவது போன்றவை பதிவாகியுள்ளது.
Shocking viral video pic.twitter.com/ppPRXuAtCU
— Tushar Srivastava (@TusharSrilive) March 14, 2023
ஆக்ரோஷமான பனிச்சிறுத்தை :
பனிச்சிறுத்தைகள் பெரிய பூனை குடும்பத்தின் கம்பீரமான உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்கள் நம்பமுடியாத வேட்டைக்காரர்களும் கூட. காடுகளில் பனிச்சிறுத்தையை பார்ப்பது அரிதான காட்சி. ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள வீடியோவில் பனிச்சிறுத்தை ஒன்று செங்குத்தான சரிவில் இருக்கும் தனது இரையை பிடிக்க பாய்ந்து செல்கிறது. இந்த ஆக்ரோஷமான வேட்டையில் சிறுத்தை குன்றின் மீது விழுந்த பிறகும் இரையை எளிதாக பிடித்தது. பனிச்சிறுத்தை வேட்டையாடும் அரிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ghost of the mountains. Most Agile hunters. Snow leopard hunting near Ullay a Shyapu Ladakh Urial on 13th March. Sharing as received. pic.twitter.com/XginjJNOSS
— The Wild India (@the_wildindia) March 15, 2023