விண்டேஜ் கேமரா, பழங்கால அமெரிக்க புத்தகம்… பிரதமர் மோடிக்கு பைடன் பரிசு.!

Modi us Biden

பிரதமர் மோடிக்கு பழங்கால கேமராவையும், பழமையான புத்தகத்தையும் அமெரிக்க அதிபர் பைடன் பரிசளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் அளித்த அரசு விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் நினைவுப் பரிசையும் வழங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள பழமையான அமெரிக்க புத்தகம்  கேலியை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினர். மேலும் இத்துடன் ஒரு விண்டேஜ் அமெரிக்க கேமராவைவையும் பரிசளித்துள்ளார். ஜில் பைடன், பிரதமர் மோடிக்கு ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதைகள் அடங்கிய, அவர் கையொப்பமிடப்பட்ட முதல் பதிப்பு நகலை பரிசாக வழங்கினார்.

முன்னதாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மைசூர் சந்தனத்தால் செய்யப்பட்ட கைவினைஞரால் செய்யப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை பரிசளித்தார், மற்றும் ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல்லை பரிசாக வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்