பிரபல ஹோட்டலை ஹேக் செய்த வியட்நாம் ஹேக்கர் ஜோடி

வியட்நாமைச் சேர்ந்த ஹேக்கர் ஜோடி, ஹாலிடே இன் நிறுவனமான Inter Continental Hotels Group (IHG), இன் தரவுகளை நீக்கி முன்பதிவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்.

பிரபல ஹோட்டல் ஹாலிடே இன் நிறுவனத்தின் தலைவருக்குச் சொந்தமான Inter Continental Hotels Group (IHG), இன் தரவுகளை ஒரு ஹேக்கர் ஜோடி, ஹேக்கிங் செய்துள்ள்ளனர் .

இது குறித்து அவர்கள் மேலும் பேசியதாவது, நாங்கள் இதை ஒரு வேடிக்கைக்கு செய்ததாக கூறினார்கள். நாங்கள் முதலில் ரான்சாம்வார் தாக்குதலை நடத்த விரும்பினோம் அதன் பின் தரவுகள் முழுவதையும் அளித்து விட்டு மாற்றி எழுதினோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஹோட்டலின் மிகவும் பலவீனமான கடவுச்சொல்லை பயன்படுத்தியே தாங்கள் இந்த ஹேக்கிங் ஐ செய்தோம் என்று அந்த ஹேக்கர் ஜோடி பிபிசிக்கு கூறியுள்ளது. மேலும் தாங்கள் செய்த ஹேக்கிங் படங்களை பிபிசியுடன் பகிர்ந்துள்ளது. இதனை (IHG) ஹோட்டலும் உறுதிப் படுத்தியது.

ஹோட்டல் குழுவிற்கு தாங்கள் ஏற்படுத்திய சேதம் குறித்து தங்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை என்றும் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயல் மூலம் ஹோட்டலின் முன்பதிவு மற்றும் பிற பயன்பாடுகளுக்கு இடையூரை அளித்தது.

ஹோட்டல் நிறுவனம் இது குறித்து பதில் அளிக்கும் போது, நாங்கள் சம்மந்தபட்ட தொழிநுட்ப வல்லுனர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்