#ValentinesDay2023 : காதலர்களே உங்களுக்கு தெரியுமா..? நிறங்களை வைத்து மனதை புரிந்து கொள்ளும் ரகசியம்..!

Default Image

காதலர் தினம் 2023 :

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. அப்படி வரும் காதல் எந்த விதமான தகுதியையும், எதிர்பார்ப்பையும் பார்க்காமல் அன்பால் மட்டுமே வரும் ஒரு அழகான காவியம். ஒருவர் மீதான காதலை வெளிப்படுத்த நாட்காட்டியில் பல நாட்கள் இருந்தாலும் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்தின் ஒரு ஒரு நாளுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு. அந்த சிறப்பு தான் காதலர் தினம்.

Valentines day
Valentines day [Image Source: Twitter ]

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் 14 ஆம் தேதியான இன்று உலக மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்களிடம் அவர்களின் அன்பையும், காதலையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த காதலர் தினத்தில் மக்கள் அணியும் ஆடையை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்கு ஒரு சில குறியீடுகள் உள்ளது. அத்தகைய குறியீடுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

காதலர் தின வண்ணக் குறியீடுகள் மற்றும் அர்த்தங்கள்:

சிவப்பு நிறம் (Red) : காதலில் தொடர்புடைய பரிசுகள், படங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால் சிவப்பு என்பது ரொமான்ஸின் சின்னம். இரு இதயங்களின் நிறமும் சிவப்பு. எனவே சிவப்பு நிற ஆடையை அணிவது என்பது நீங்கள் ஏற்கனவே ஒருவருடன் காதலில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

Red color

நீல நிறம் (Blue) : காதலர் தினத்தில் மிகவும் முக்கியமான இடம் இந்த நீல நிறத்திற்கு உண்டு. கடல் எதையும் தன்னுடன் ஏற்றுக்கொள்வது போல அதன் நிறமான நீளமும் எதையும் ஏற்றுக்கொள்ளும். அதாவது இது நீங்கள் காதலில் இல்லை, ஒருவரின் காதலை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதை குறிக்கிறது. அதாவது, ஒரு ஆண் அல்லது பெண், காதலை ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறார் என்று அர்த்தம்.

Blue dress

பச்சை நிறம் (Green) : பசுமையின் நிறமான பச்சை உங்களின் காத்திருப்பைக் குறிக்கிறது. அதாவது நீங்கள் ஒருவரிடம் காதலை சொல்லி அவர்கள் உங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்றால் பச்சை நிற ஆடை அணிந்து நீங்கள் பதிலுக்காக காத்திருப்பதை உங்கள் காதலி அல்லது காதலனுக்கு தெரிவிக்கலாம்.

Green dress

ஆரஞ்சு நிறம் (Orange) : இந்த நிறம் உங்களின் மனதில் உள்ள காதலை பிடித்தமான ஒரு பெண் அல்லது ஒரு ஆணிடம் சொல்லப் போவதைக் குறிக்கும். உங்கள் காதலை வார்த்தைகளால் சொல்ல தயங்கினால் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து தங்களின் விருப்பத்திற்குரியவர்களுக்கு தெரிவிக்கலாம்.

orange dress

வெள்ளை நிறம் (White) : வெள்ளை நிற ஆடை அணிவது நீங்கள் ஒருவரை மிகவும் நேசிக்கிறீர்கள் ஆனால் இன்னும் அவரிடம் சொல்லவில்லை என்பதை குறிக்கும். உங்களை யாரேனும் விரும்பி அவர்களுக்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது காதலில் இருக்கிறீர்களா என்பதை இந்த நிறம் தெரியப்படுத்தும்.

white dress

பிங்க் நிறம் (Pink) : உங்களுக்கு ஒருவர் காதலை சொல்லியிருப்பது அல்லது நீங்கள் ஒருவருக்கு காதலை வெளிப்படுத்தி பதிலுக்காக காத்திருப்பீர்கள், அவர் உங்கள் காதலை ஏற்றுக்கொண்டால் அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்டால் பிங்க் நிற உடை அணிந்து தெரிவிக்கலாம்.

pink dress

மஞ்சள் நிறம் (Yellow) : காதலர் தினத்தன்று யாராவது மஞ்சள் நிற ஆடை அணிந்து இருந்தால் அவர்கள் காதலில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் உங்களின் காதலில் தோல்வியடைந்திருந்தால் மஞ்சள் நிற ஆடை அணிந்து தெரிவிக்கலாம்.

yellow dress

சாம்பல் அல்லது ஊதா நிறம் (Grey/Purple) : இதற்கு உங்கள் மீது ஆர்வம் இல்லை, அடுத்த முறை இன்னும் சிறப்பாய் அமைய என்னுடைய வாழ்த்துகள் என்று அர்த்தம். அதாவது நீங்கள் ஒருவரிடம் காதலை வெளிப்படுத்தி விட்டு, அவர் காதலர் தினத்தின் போது சாம்பல் அல்லது ஊதா நிற உடை அணிந்து வந்தால் அவருக்கு உங்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

grey, purple dresse

கருப்பு நிறம் (Black) : காதலர் தினத்தில் மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒரு நிறமாக உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஒருவரிடம் காதலை கூறி விட்டு அவர் உங்களை நிராகரித்தால் இந்த கருப்பு நிற உடை அணிய வேண்டும். உங்கள் காதல் நிராகரிக்கப்பட்டதை இந்த உடை அணிந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்பதையும் குறிக்கிறது.

Black Dress

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்