ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று உலக முழுவதும் உள்ள காதல் ஜோடிகள் தங்களது காதலர் தினத்தை பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தன்று தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை உள்ளிட்டவற்றை பரிமாறிக்கொண்டு காதல் ஜோடிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்வார்கள்.
இந்த சூழலில் காதலர் தினம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். காதலர் தினம் குறித்து பல கதைகள் பின்னால் உள்ளன. காதலர் தினத்தின் தொடக்ககால பண்டைய முறை ரோமில் காணலாம். அங்கு பிப்ரவரி நடுப்பகுதியில் லுபர்காலியா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு, அப்போது பல்வேறு விதமான முறைகள் கையாளப்பட்டது. இந்த பண்டிகையை புனித காதலர் தினமாக மாற்றியதாக நம்பப்படுகிறது.
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி… புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்!
பின்னர் 18ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் காதலர்கள் மத்தியில் காதலர் தினம் பிரபலமானது. கையால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள், கவிதைகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வாக இது மாறியது. 19 ஆம் நூற்றாண்டில், காதலர் தின கொண்டாட்டம் உலகம் முழுவதும் பெரிதானது.
இன்று காதலர் தினம் அன்பை மட்டும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இல்லாமல், மலர்கள், ஆடம்பர பரிசு பொருட்கள், சாக்லேட்டுகள் முதல் நகைகள் வரை என பல பில்லியன் டாலர்கள் வருவாயை கொடுக்கும் தொழிலாக மாறி உள்ளது. அதாவது, நவீன காலத்தில் காதலர் தினம் வணிகமயமான பண்டிகையாக மாறிவிட்டது என்றே கூறலாம். காதலர் தினத்தில், இதயப்பூர்மான பரிசுகளை அளிப்பவர்களுக்கு மட்டுமே அது என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஆடம்பரமாகச் செலவு செய்து பரிசு வழங்க வேண்டும் என்ற நிலை கிடையாது. உண்மையான அன்பே காதல், திருமணத்தில் முடிந்தால் மட்டுமே காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை. ஒருவர் நம் மீது அல்லது நாம் அவர் மீது வைக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருந்தால் அது தான் உண்மையான காதலாகும். இளமையில் மட்டும் தான் காதல் மலரும் என கூற முடியாது, வயதானாலும் உண்மையான அன்பு எப்போதும் காதலாக மலர்ந்துகொண்டே இருக்கும். இதுவே காதலர் தினம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் ஆகும்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…