ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேலுக்கு அமெரிக்கா தீடீர் எச்சரிக்கை..!
ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா : ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு, இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 தேதி நடந்த தாக்குதலுக்கு தற்காப்பாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈரானின் இராணுவ இலக்குகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனிடையே, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் “ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள், ஒரு தற்காப்புக்கான பயிற்சி” என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 1 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதில் அமெரிக்க தலையீடு இல்லை என விளக்கம் அளித்துள்ளது.