காசாவில் போர் நிறுத்தம் தேவை…அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்.!

kamala harris - gaza

Kamala Harris: அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், உடனடியாக காசாவின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள செல்மாவில் நேற்று (மார்ச் 3ம் தேதி) நடைபெற்ற ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், காசா -இஸ்ரேல் போர் குறித்து பேசியுள்ளார்.

READ MORE – பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் ஷெபாஸ் ஷெரீப்

5 மாதங்கள் கடந்தும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறத. போர் முதலில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு, பின்னர் தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் தற்போது வரை காஸாவில் சுமார் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்னும், 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கலாமல் உள்ளது.

READ MORE – அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி..! இந்திய நடனக் கலைஞர் சுட்டுக்கொலை

இருப்பினும் ஒரு முறை மட்டும் இரு தரப்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, ஒரு வாரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதன்பின், போர் நிறுத்ததிற்கான பேச்சு வார்த்தை சுமுகமாக எட்டப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, காசா பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்கி கொண்டு இருந்த போது இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

READ MORE – மும்பை தாக்குதல்… முக்கிய குற்றவாளி அசாம் சீமா பாகிஸ்தானில் உயிரிழப்பு.!

இதனையடுத்து, அமெரிக்கா விரைவில் விமானம் மூலம் காசாவிற்கு நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். இந்த நிலையில், உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறிஉள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “காசாவில் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், அங்கு நிலவும் நிலைமைகள் மனிதாபிமானமற்றவை. இஸ்ரேலிய அரசாங்கம் இன்னும் அதிகமாக உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறியதோடு, உடனடி போர் நிறுத்தம் தேவை. அடுத்த ஆறு வாரங்களுக்கு உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்” என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்