அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்றார்..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கிவ்க்குச் சென்றார்.
ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக உக்ரைன் தலைநகரமான கீவ் நகருக்கு சென்றுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார். அங்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.