சான்றிதழ் வழங்கும் விழாவில் கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று விமான படை விழாவில் திடீரென தவறி விழுந்து விட்டார்.
அமெரிக்க விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சியை விமானப்படை அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் விமானப்படை வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதிபர் பைடன் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி கொண்டிருந்தார். பிறகு பேசுவதற்கு செல்கையில் கால் இடறி திடீரென தவறி விழுந்து விட்டார். உடனடியாக அருகில் இருந்த விமானப்படை அதிகாரிகள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.
இடறி விழுந்த பைடனுக்கு சிறிய முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், விமானப்படை வீரர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கம் போல உரையாற்றினார்.