துணை அதிபர் டிரம்ப்பா.? கமலா ஹாரிஸா.? மீண்டும் மேடையில் உளறிய ஜோ பைடன்.!

Donald Trump - Joe Biden - Kamala haris

அமெரிக்கா: துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயருக்கு பதிலாக டிரம்ப் பெயரை மேடையில் கூறினர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சார வேலைகள் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

இதில் 81 வயதான ஜோ பைடனின் உடல்நிலை அவரது பேச்சுக்கள் அவரது ஜனநாயக கட்சியினரையே சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கட்சிக்குள்ளேயே ஜோ பைடனுக்கு எதிரான நிலை உருவாகி வருகிறது . இருந்தும் தான் ஜனாதிபதி போட்டியில் இருந்து பின்வாங்க போவதில்லை. இந்த முறையும் டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பேன் என ஜோ பைடன் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று (வியாழன்) ஒரு நிகழ்வில் பேசிய ஜோ பைடன் , துணை அதிபர் கமலா ஹாரிஸ் பற்றி பேசினார். அப்படி பேசுகையில், தவறுதலாக “துணை அதிபர் டிரம்ப்” என கமலா ஹாரிஸ் பெயரை மாற்றி கூறிவிட்டார். பைடன் கூறுகையில், ” துணை அதிபர் டிரம்ப் (கமலா ஹாரிஸ்) ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் அவரை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, அமெரிக்க குடியரசு தினத்தன்று, சுதந்திர தின வாழ்த்துக்கள் என கூறினார் ஜோ பைடன். மேலும், நான் 2020இல் மீண்டும் டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பேன் என ஒரு நிகழ்வில் கூறினார். அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர் நான் என தவறுதலாக பல்வேறு இடங்களில் ஜோ பைடன் பேசி வருவது அவர்களது கட்சியினரே சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக சிலர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்