வருங்காலம் AI தான்.. பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் வழங்கிய சிற(வ)ப்பு டி.சார்ட்.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு சிவப்பு நிற டி.சார்ட் ஒன்றை பரிசளித்தார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங்க்டன் வந்த பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு சிறப்பு டி சார்ட் ஒன்றை பரிசளித்தார். அதிபர் பரிசளித்த சிவப்பு நிற டி-சர்ட்டில் இனி எதிர்காலம் AI என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, AIக்கு அர்த்தமாக அமெரிக்கா (America) மற்றும் இந்தியா (India) என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
அந்த AIக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. தற்போது தொழில்நுட்ப உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் தான் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artifical Intelegence) ஆகும். இதனை குறிக்கும் வகையில் கூட The Future is AI எனும் இனி எதிர்காலம் AI என அந்த டி-சர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அர்த்தம் கொள்ளலாம்.