ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், ரஷ்ய அதிபர் புதினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளியன்று உயிரிழந்தார். இவர் ரஷ்யாவின் கடும் குளிர் பகுதியான ஆர்டிக் பகுதி சிறைசாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த நிலையில் மரணடமடைந்தார் என்பது உலகம் முழுக்க பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
நவல்னி மரணத்திற்கு பிறகு ரஷ்யாவில் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மரணம் பற்றிய உண்மையான காரணம் தெரியவேண்டும் என உலக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நவல்னி மரணத்திற்கு புதின் மற்றும் அவரது அரசு பொறுப்பேற்று உரிய காரணத்தை வெளிப்படையாக கூற வேண்டும் என்றும், மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நவல்னி மனைவி யூலியா நவல்னி சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் உரையாற்றினார்.
இந்நிலையில், மறைந்த நவல்னியின் மனைவி யூலியா நவல்னி மற்றும் அமெரிக்காவில் பயின்று வரும் நவல்னி மகள் தஷா நவல்னி ஆகியோர் அமெரிக்கா, சான்பிராசிஸ்க்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினர். அப்போது நவல்னி மறைவுக்கு பைடன் தனது இரங்கலை பகிர்ந்து கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து பைடன் கூறுகையில், வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால், நவல்னி நம்பமுடியாத தைரியம் கொண்டவர். அவரது மனைவியும் மகளும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு காரணமான புடினுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கப் போகிறோம் என்றும், நவல்னி மரணத்திற்கு புதின் பதில் கூற வேண்டும் என்றும், ஜோ பிடன் கூறினார்.
நவல்னி மறைவுக்கு குறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், மறைந்த அலெக்ஸி நவல்னி, அசாதாரண தைரியம் கொண்டவர். ஊழலுக்கு எதிராகவும் சுதந்திரமான ஜனநாயக ரஷ்யாவுக்காகவும் போராடும் குணத்தை நவல்னி கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…