நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

Joe biden and Yulia Navalny

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், ரஷ்ய அதிபர் புதினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளியன்று உயிரிழந்தார். இவர் ரஷ்யாவின் கடும் குளிர் பகுதியான ஆர்டிக் பகுதி சிறைசாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த நிலையில் மரணடமடைந்தார் என்பது உலகம் முழுக்க பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

நவல்னி மரணத்திற்கு பிறகு ரஷ்யாவில் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மரணம் பற்றிய உண்மையான காரணம் தெரியவேண்டும் என உலக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ReadMore – எனது கணவரின் மரணத்திற்கு புடின் பதில் கூற வேண்டும்.! நவல்னி மனைவி கடும் குற்றசாட்டு.!

நவல்னி மரணத்திற்கு புதின் மற்றும் அவரது அரசு பொறுப்பேற்று உரிய காரணத்தை வெளிப்படையாக கூற வேண்டும் என்றும், மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நவல்னி மனைவி யூலியா நவல்னி சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் உரையாற்றினார்.

இந்நிலையில், மறைந்த நவல்னியின் மனைவி யூலியா நவல்னி மற்றும் அமெரிக்காவில் பயின்று வரும் நவல்னி மகள் தஷா நவல்னி ஆகியோர் அமெரிக்கா, சான்பிராசிஸ்க்கோவில்  அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினர். அப்போது நவல்னி மறைவுக்கு பைடன் தனது இரங்கலை பகிர்ந்து கொண்டார்.

ReadMore – ரஷ்யாவில் தொடரும் பரபரப்பு… அலெக்ஸி நவல்னி சகோதரர் மீது அடுத்த வழக்கு.! 

இந்த சந்திப்பு குறித்து பைடன் கூறுகையில், வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால், நவல்னி  நம்பமுடியாத தைரியம் கொண்டவர். அவரது மனைவியும் மகளும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு காரணமான புடினுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கப் போகிறோம் என்றும், நவல்னி மரணத்திற்கு புதின் பதில் கூற வேண்டும் என்றும், ஜோ பிடன் கூறினார்.

நவல்னி மறைவுக்கு குறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், மறைந்த அலெக்ஸி நவல்னி, அசாதாரண தைரியம் கொண்டவர். ஊழலுக்கு எதிராகவும் சுதந்திரமான ஜனநாயக ரஷ்யாவுக்காகவும் போராடும் குணத்தை நவல்னி கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi