ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் தகவல்.!

US President Joe Biden

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது.  இரு தரப்பு போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்கள் , உலகளாவிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இன்னும் காஸாவில் போர் சத்தம் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நோன்பு காலம் தொடங்கி, ஏப்ரல் 9ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நிறைவடைகிறது. இஸ்லாமியர்களின் உயரிய பண்டிகையாக கருதப்படும் இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Read More – மேற்கு ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு.! 15 பேர் உயிரிழப்பு.!

இதுகுறித்து ஜோ பைடன் நேற்று பதிவு செய்த வீடியோவில் , இரு தரப்பும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பணயக்கைதிகள் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை அடுத்ததாக இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கியுள்ளது. அடுத்த திங்கட்கிழமைக்குள் இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புவதாகவும் அந்த வீடியோவில் பைடன் கூறினார்.

மேலும்  இந்த போரின் காரணமாக பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். தற்காலிக போர்நிறுத்தம் மூலம் பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் மீண்டும் நிம்மதியாக வாழ தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்றும் கூறினார்.

Read More – அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…

ரம்ஜான் இடைக்கால போர் நிறுத்தம் மற்றும் பிணை கைதிகள் பரிமாற்றம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,  பெண்கள், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்றும், அதே நேரத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 400 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் , காசாவில் உள்ள சேதமடைந்த மருத்துவமனைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் குறிப்பாக பேக்கரிகள்  ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்க ஒவ்வொரு நாளும் 500 டிரக்குகள் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கும் என்று தனியார் செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் (Reuters) மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்