மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

நாடு கடத்தும்போது இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

Vikram Misri

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், பஞ்சாபின் அமிர்தசரஸில் அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்துவரப்பட்ட, அவர்கள் கைகள் மற்றும் கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு விமானத்தில் பயணம் செய்யப்பட்டதாகவும் அதற்கான புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே விலங்கு அவிழ்க்கப்பட்டது தெரியவந்துள்ளது
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங் தனியார் ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து,  சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸை USBP வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திருப்பியனுப்பியது.கை, கால்களில் விலங்கிடப்பட்டது தொடர்பாக, சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நுழைந்தால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்” எனவும் அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தலைவர் மைக்கேல் டபிள்யூ தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர்” நாடு கடத்தப்படுவது என்பது புதிதான விஷயம் இல்லை. இது குறித்து ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் உரையாற்றினார்.

அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள் சற்று வேறுவிதமாக உள்ளன. வெளியேற்ற நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் எங்களுக்கு தகவலும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து மொத்தமாக எவ்வளவு பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என தற்போது கூற இயலாது. ஆனாலும், அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளோம்

ஏற்கனவே, கொண்டு செல்லப்பட்ட  104 பேரை தாயகம் அனுப்பிவைத்துவிட்டார்கள். மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவிடம் இருந்து தகவல் எங்களுக்கு வைத்துள்ளது. வந்துள்ளது. நாடு கடத்தும்போது இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

இது ஒரு முறை மட்டுமே நடக்கும் விவாதம் அல்ல, ஒரு முறை மட்டுமே நடக்கும் உரையாடல். நாடு கடத்தப்படுபவர்கள் உட்பட, மக்கள் நியாயமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்” எனவும் விக்ரம் மிஸ்ரி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்