அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!

அமெரிக்காவில் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில, சுனிதா வில்லியம்ஸ், மற்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து வாக்களித்தனர்.

american election 2024

அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் தினத்தன்று, விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெட்டிட் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, வாக்களித்து அதற்கான புகைப்படத்தைப் பகிர்ந்து”அமெரிக்கராக இருப்பதில் பெருமிதம்” என நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

இதன் மூலம், விண்வெளியில் அமர்ந்து, நின்றோ அல்லது மிதந்தோ எந்த இடத்திலிருந்தாலும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் என்பதை இவர்கள் விண்வெளியிலிருந்து வாக்கு செலுத்தியதன் மூலம் தெரிகிறது.

விண்வெளியில் இருந்து எப்படி வாக்களிக்க முடியும்?

விண்வெளியில் இருந்து எப்படி வாக்கு அளிக்கப்படும் என்ற கேள்வி பலருக்கும் இருப்பது உண்டு. அங்கு எப்படி வாக்குகள் அளிக்கப்படுகிறது என்றால், தரையில் உள்ள ஆண்டெனாக்களுடன் தொடர்பு கொள்ளும் செயற்கைக்கோள்களின் அமைப்பான நாசாவின் நியர் ஸ்பேஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அவர்கள் அளிக்கும் வாக்குகள் மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுகின்றன.

விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் வசதி கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இருந்தே அமெரிக்காவிலிருந்து வருகிறது. டெக்சாஸ் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்குப் பிறகு இந்த வசதி கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live 06.11.2024
Tiruchendur Soorasamharam
Mettupalayam Train
Trump
Minister Senthil Balaji - Tamilnadu CM MK Stalin
Kamala Harris
donald trump speak