22 Americans killed: இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

22 Americans killed

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இடையேயான போர் ஆறாவது நாளாகத் நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதலில் அமெரிக்க வாசிகளும் உயிரிழந்துள்ளனர், இந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தது.

தற்பொழுது, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் அமெரிக்க வாசிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாயன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்திய 11 எண்ணிக்கையிலிருந்து தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அங்கு நிலவரம் குறித்து ஆராய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலுக்குப் புறப்பட்டார். மேலும், தங்கள் நாட்டு போர் கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

State Of Palestine: போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு!

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய இந்த போரில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஹமாஸுக்கு எதிரான தாக்குதலை முடுக்கிவிட்டு, காசாவில் ‘முழு முற்றுகை’க்கு இடையே தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது இதுவரை இந்த தாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீனியம் என இரு நாட்டை சேர்ந்த மக்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்