பொருளாதார வீழ்ச்சி.! 3000 பணியாளர்களை வேலையை விட்டு தூக்கிய அமெரிக்க நிறுவனம்.!
அமெரிக்காவில் 3,000 பணியாளர்களை குறைக்கப்போவதாக எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலகில் பெரிய நிதிச் சேவை நிறுவனமான எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், தனது 3,000 அமெரிக்க ஊழியர்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமைகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்த பிறகு, பணியாளர்களை குறைப்பதற்காக இந்த கடினமான முடிவு எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனத்தில் தணிக்கை மற்றும் ஆலோசனை பிரிவுகளை பிரிக்கும் திட்டத்தை நிறுத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த பணிநீக்கம் அறிவிபப்பை வெளியிட்டுள்ளது.