நெப்ரஸ்கோ பல்கலைக்கழகம் எச்.ஐ .வி கிருமியை முற்றிலும் அழித்து சாதனை !
எச்.ஐ .வியை குணப்படுவதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஏ . ஆர் .டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிக்சை மட்டும் அளிக்கப்படுகிறது.இந்த அறுவை சிகிக்சை எச்.ஐ .வி நோயில் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காப்பாற்றாது ஆனால் வாழ்நாளை நீடித்து வாழ்வதற்கு உதவி செய்யும்.
இந்த கிருமியை அழிப்பதற்கு உலகில் உள்ள ஆராச்சியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் எலியின் உடலில் எச்.ஐ .வி கிருமியை அழித்து நெப்ரஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராச்சியாளர்கள் சாதனை படைத்தது உள்ளனர்.
எச்.ஐ .வியால் பாதிக்கப்பட்ட எலிக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை செலுத்தியதன் மூலம் எலியின் மரபணுவில் இருந்த எச்.ஐ .வி கிருமி நீக்கப்பட்டு உள்ளது.இதேபோல எச்.ஐ .வி நோயில் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுவை மாற்றியமைப்பதே இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும்.
இந்த வெற்றியினால் எச்.ஐ .வி நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க கிடைத்த முதல் வெற்றியாக நெப்ரஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.