அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை! அப்போ கமலா ஹாரிஸ்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 10 மாகாணங்களிலும், கமலா ஹாரிஸ் 7 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.
அதன்படி, குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், 95 இடங்களில் முன்னிலையும், 10 மாகாணங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே நேரம், கமலா ஹாரிஸ் 35 இடங்களில் முன்னிலையும், 8 மாகாணங்களில் வெற்றியும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 538 இடங்களில், 270ல் வெல்பவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
டொனால்ட் டிரம்ப் இதுவரை வென்ற மொத்த மாநிலங்கள்:
- ஆர்கன்சாஸ்
- புளோரிடா
- இந்தியானா
- மேற்கு வர்ஜீனியா
- கென்டக்கி
- தென் கரோலினா
- டென்னசி
- ஓக்லஹோமா
- அலபாமா
- மிசிசிப்பி
கமலா ஹாரிஸ் இதுவரை வென்ற மொத்த மாநிலங்கள்:
- இல்லினாய்ஸ்
- டெலவேர்
- நியூ ஜெர்சி
- வெர்மான்ட்
- மேரிலாந்து
- கனெக்டிகட்
- மாசசூசெட்ஸ்
- ரோட் தீவு
எலெக்டோரல் காலேஜ் முறை
இதனிடையே, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் 105 “எலக்டோரல்” வாக்குகளை பெற்று முன்னிலை வகுக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 27 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 277 எலக்டோல் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும். எலெக்டோரல் காலேஜ் என்பது அமெரிக்க அதிபர்களைத் தேர்ந்தெடுக்கும் தனித்துவமான அமைப்பாகும். எலெக்டோரல் காலேஜ் என்பது 538 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இது மக்கள் வாக்குகளிலிருந்து வேறுபட்டதாகும்.
எலெக்டோரல் காலேஜ் அமைப்பின் கீழ், ஒரு பெரிய மாநிலத்தில் உள்ள ஒருவரின் வாக்கை விட, சிறிய மாநிலத்தில் உள்ள ஒரு வாக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.