ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பு!

Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தது. அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியான தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதுவும் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய நேரடி தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டங்களை தெரிவித்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.
மறுபக்கம் ஈரானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அடுத்த வினாடியே பதிலடி கொடுப்போம் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டனும் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளும் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும், ஈரான் தாக்குதலை சிதைக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்புகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025