டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையேயான இந்த தொலைபேசி உரையாடல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

trump zelensky phone call

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தற்போது, அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.

இதற்கு முன்னதாக, டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அந்த உரையாடலில், போரை நிறுத்துவதற்கான சாத்தியங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும், இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஜெலன்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உரையாடலுக்கு முன்னதாக, மார்ச் 11ம் தேதி அன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இது, அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாக அமைந்தது என்று ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொது, இந்த இருநாட்டு (விளாடிமிர் , ஜெலன்ஸ்கி) அதிபருடனான தொலைபேசி உரையாடல் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு திருப்புமுனையாக அமையலாம். டிரம்ப் முன்மொழிந்த 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை உக்ரைன் ஏற்கத் தயாராக உள்ளதாகவும், ரஷ்யாவும் இதற்கு ஒப்புக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் உள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப், ரஷ்யாவுடனான தனது முந்தைய உரையாடலை அடிப்படையாகக் கொண்டு, போரை நிறுத்துவதற்கான சாத்தியமான திட்டங்களை ஜெலன்ஸ்கியுடன் விவாதித்துள்ளார். 30 நாள் இடைக்கால போர் நிறுத்தம் ஒரு முன்மொழிவை பரிசீலித்ததாகவும், அதை உக்ரைன் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சு வார்த்தை வெற்றியடைந்தால், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

தொலைபேசி உரையாடல் :

நேற்று இரவு பத்திரிகையாளர்களுடனான ஜூம் அழைப்பில் பேசிய ஜெலென்ஸ்கி , “டிரம்பிடமிருந்து தனக்கு “எந்த அழுத்தமும் ஏற்படவில்லை” என்றும், இது ஒரு பயனுள்ள உரையாடல், ஒருவேளை நாங்கள் நடத்தியதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மனநிலை நேர்மறையானது. எரிசக்தி மீதான போர் நிறுத்தம் பற்றி நாங்கள் பேசினோம், எனவே எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கக்கூடாது, மேலும் நாங்கள் பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றியும் பேசினோம். தெற்கு உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா அணுமின் நிலையத்தை உரிமையாக்குவதற்கான அமெரிக்க முன்மொழிவு குறித்து தானும் டிரம்பும் விவாதித்ததாகவும் கூறினார்.

டிரம்ப் தரப்பிலிருந்து, இந்த உரையாடல் “மிகவும் சிறப்பாக” அமைந்ததாகவும், சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தனது “ட்ரூத் சோஷியல்” தளத்தில் பதிவிட்ட தகவலின்படி, புதினுடனான அவரது சமீபத்திய உரையாடலை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புகளின் கோரிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். “நாம் சரியான பாதையில் செல்கிறோம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மோதல்களுக்குப் பிறகு நல்லுறவு:

அண்மையில், டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பு வாக்குவாதத்தில் முடிந்தது. ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு போதுமான நன்றி தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த உரையாடல் மூலம் இரு தலைவர்களும் மீண்டும் ஒரு ஆக்கபூர்வமான உறவைத் தொடங்கியிருப்பது தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Minister Anbil Mahesh - Governor RN Ravi
TN Temp
CSK (2009) - PBKS (2025)
Tollgate - Union minister Nitin Gadkari
KKRvsPBKS
PBKSvsKKR