2023 ஆம் ஆண்டின் சார்லமேன் பரிசுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தேர்வு.!
2023 ஆம் ஆண்டின் சார்லமேன் பரிசுக்கு உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சார்லமேன் பரிசுக்கு உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் மக்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மன் பரிசுக் குழு தெரிவித்தது. ஜெர்மனியின் ஆச்சென் நகரம், ஐரோப்பிய ஒற்றுமைக்கான பங்களிப்புகளுக்காக வழங்கும் இந்த சார்லமேன் பரிசு நேற்று ஜெலன்ஸ்கிக்கு வழங்கப்பட்டது என்று கூறியது.
ஐரோப்பிய ஒற்றுமைக்காக ஆற்றிய பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் உக்ரைனின் மக்களுக்காக மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய மதிப்புகளுக்காகவும் ரஷ்யாவுடன் போராடுகிறார்கள் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் இந்த பரிசு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
புனித ரோமானியப் பேரரசர் சார்லமேனின் பெயரிடப்பட்ட இந்த பரிசு, ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒற்றுமைக்கான சேவைக்காக 1950 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் இந்த பரிசை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.