பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை சாடிய உக்ரைன் அதிபர்.! ஜனநாயகமும்.. குற்றவாளியும்..

PM Modi - Russia President Putin - Ukraine President Zelensky

உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை அவ்வபோது நிகழ்த்தி வருகிறது. நேற்று கூட, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட முக்கிய 5 நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ந்த தாக்குதலால் மட்டுமே 3 குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர்.  கீவ் நகர் உட்பட டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்ளிட்ட நகரங்களின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனில் தாக்குதல் நடந்த நேற்றைய தினம் தான் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். 22வது இந்தியா – ரஷ்யா மாநாட்டில் கலந்துகொண்டு இரு நாட்டு உறவை பலப்படுத்தும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை நிகழ்த்தினார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன், இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ள நிகழ்வை மறைமுகமாக குறிப்பிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சனம் செய்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிடுகையில், ” ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக உக்ரைனில் இன்று, 37 பேர் கொல்லப்பட்டனர். 170 பேர் காயமடைந்தனர்.

உலகின் மிகப்பெரிய தலைவரின் சந்திப்பின் போது இப்படியான நிகழ்வு பெரும் ஏமாற்மே. அமைதியின் முயற்சிகளுக்கு இந்த தாக்குதல்கள் பேரழிவை தரும். உலகின் மிக இரத்தக்களரி குற்றவாளியை (ரஷ்ய அதிபர் புதின்) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலகின் மிக பெரிய ஜனநாயக தலைவர் (பிரதமர் மோடி) நேற்று தாக்குதல் நடைபெற்ற நாளில் சந்திப்பு நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்