இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

Volodymyr Zelenskyy

கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி, இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்’ என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.

டிரம்ப் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ராஜினாமா செய்ய தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்திருக்கிறார். கீவ் நகரின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, “நான் ஜனாதிபதியாக இல்லாமல் உக்ரைனில் அமைதி வந்து, அதற்காக நான் பதவி விலக வேண்டியிருந்தால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயாராக இருக்கிறேன். உக்ரைனின் நிலைமையைப் புரிந்துகொண்டு, ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிக்க உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

மேலும், டிரம்பை உக்ரைனின் பங்காளியாகவும், கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே ஒரு மத்தியஸ்தராகவும் பார்க்க விரும்புவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, உக்ரைன் ஜனாதிபதி செய்தியாளர் சந்திப்பில், ‘நான் டிரம்புடன் ஒருவரையொருவர் பற்றி நிறைய புரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினார். அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்கள் எங்களுக்கு மிகவும் தேவை” என்று கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்