மாஸ்கோவைத் தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள்..! ஒருவர் காயம்..விமான நிலையம் மூடல்..!

UkraineDroneAttack

உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் ஒரு கட்டிடத்தில் உள்ள பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலின் விளைவாக கட்டிடத்தில் முதல் மாடியிலிருந்து நான்காம் தளம் வரையிலான கண்ணாடிகள் உடைந்துள்ளன. இதுகுறித்து கூறிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், மாஸ்கோ நகரில் உள்ள இரண்டு அலுவலக கட்டிடங்களின் சிறிதளவு சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு மாஸ்கோவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் 3 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்