ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க உக்ரைன் வலியுறுத்தல்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினரில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. 1991ல் சோவியத் யூனியன் பிரிந்ததில் இருந்து ரஷ்யா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சோவியத் ஒன்றியத்தின் இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.
கடந்த 30 ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சட்ட விரோதமாக இருந்து வரும் ரஷ்யா, போர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் மற்ற நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றியதாக மேலும் கூறியது. 15 இடங்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் ஐநாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீது அதிகாரம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.