இருளில் உக்ரைன்! புதுவகை அடுப்புகள் கண்டுபிடிப்பு..!
உக்ரைனில் மின்சாரம் இல்லாத பகுதிகளில், மக்களுக்காக பழைய கார் ரிம்களில் இருந்து அடுப்புகள் தயார் செய்யப்படுகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைனின் மின் நிலையங்களை ரஷ்ய ஏவுகணைகள் குறிவைத்து அளித்தன. இதனால் உக்ரைனின் பெரும்பாலான பகுதியில் மின்சாரமானது தடைப்பட்டது. மின்சார தடையால் மக்கள் அனைவரும் இருளிலும் மற்றும் கடும் குளிரிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்பொழுது அவர்களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் இருளில் தவிக்கும் மக்களுக்காக லிதுவேனியா நாட்டின் நிறுவனம் கார்களில் உள்ள பழைய ரிம்களிலிருந்து அடுப்புகளை தயார் செய்கிறது. பழைய கார் ரிம்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அடுப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.