நடுவானில் மோதிய இரு விமானங்கள்.! விமானி உயிரிழப்பு.!
போர்ச்சுகல் : கடந்த ஞாற்றுக்கிழமை அன்று தெற்கு போர்ச்சுகலில் உள்ள பெஜா விமான நிலையத்தில் மாலை 4:05 மணிக்கு நடைபெற்ற ஒரு விமான சாகச நிகழ்ச்சியின் போது 2 சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்துக்குள்ளான 2 விமானங்களின் ஒரு விமானி உயிரிழந்துள்ளார் எனவும் மற்றும் ஒரு விமானி காயமடைந்துள்ளார் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
ஆறு விமானங்களை உள்ளடைக்கிய வான்வழி சாகசத்தின் போது 2 விமானங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்களாகி இருக்கிறது. இதில் கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், காயம் ஏற்பட்டுள்ள அந்த விமானி தீவிர சிகிச்சை பெற்று வருவதாக போர்ச்சுகல் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போர்ச்சுகல் அதிபரான மார்செலோ ரெபெலோ டி சோசா கூறுகையில், “வானில் நடந்த இந்த விமானக் கண்காட்சி ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை கொடுத்தது மேலும் அதை காணும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் நடந்துள்ள இந்த விபத்தால் தற்போது அது வேதனையாக மாறி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
அதே போல போர்ச்சுகல் பாதுகாப்பு அமைச்சரான நுனோ மெல்லோ, ‘இது ஒரு சோகமான விபத்து என்றும், மோதலுக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும்’, செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது.
Beja Air Show accident 😨😞 DEP pic.twitter.com/4WrRfoLCeO
— Don Expensive 🇪🇦 ✞ 🐸 (@kar0____) June 2, 2024