ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா திட்டம் நவ-29 முதல் மீண்டும் தொடக்கம்- எலான் மஸ்க்
எலான் மஸ்க் ட்விட்டரின் நீல நிறைகுறியீடு சந்தா சேவை முறை, நவம்பர் 29முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரின் நீலக்குறியீடு உறுதிப்படுத்தப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், ட்விட்டரின் தலைமைபொறுப்பேற்ற எலான் மஸ்க் நீலக்குறியீடுக்கு மாதம் $8 செலுத்தி பெறும் முறையைக் கொண்டுவந்தார். இதனையடுத்து போலிக்கணக்குகள் மூலம் பயனர்கள் இந்த நீலக்குறியீடு பெற்று வந்த குற்றச்சாட்டை அடுத்து மஸ்க் இந்த நீலக்குறியீடு சந்தாதாரர் முறையை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தார்.
தற்போது மஸ்க் நவ-29 ஆம் தேதி ட்விட்டரின் நீலக்குறியீடு சந்தா சேவை முறையை மீண்டும் சில மாற்றங்களுடன் அறிமுகப்படுத்துகிறார். இந்த புதிய வெளியீட்டில், ஒருவரின் சரிபார்க்கப்பட்ட பெயரை திருத்துவது, ட்விட்டரின் சேவை விதிமுறைகளின் படி, ட்விட்டரால் அந்த பயனர் பெயர் உறுதிப்படுத்தப்படும் வரை, நீல நிறக்குறியீட்டை இழக்க நேரிடும் என்று மஸ்க் தெரிவித்தார்.