ட்விட்டரின் ப்ளூ டிக் தற்காலிக நிறுத்தம்! வெளியான தகவல்.!
ட்விட்டரின், மாதம் $8 செலுத்தும் ப்ளூ டிக் சந்தாதாரர் முறையை தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்.
ட்விட்டரின் தலைமைபொறுப்பேற்ற பின் எலான் மஸ்க், ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் ட்விட்டரில், உறுதிப்படுத்தப்பட்ட பயனர்களுக்கு தரப்படும் ப்ளூ டிக் குறியீடு, இந்த ப்ளூ டிக் குறியீடு பெற பயனர்கள் மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார். இதன்மூலம் பயனர்கள் பணம் செலுத்தி இந்த ப்ளூ டிக் குறியீட்டை பெற்றுக்கொள்ளலாம்
ஆனால் பல பயனர்கள் அளித்த புகாரில் இந்த ப்ளூ டிக் குறியீடு, அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளில் ஐஒஎஸ் ஆப்களில் இருந்து மறைந்து விட்டது. பலர் இதற்காக பணம் செலுத்தியுள்ளனர் அவர்களுக்கு இந்த ப்ளூ டிக் அம்சம் அவர்களது கணக்கில் இருந்து மறைந்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.
இதனால் ட்விட்டர், சமீபத்தில் அறிமுகப்படுத்திய அதன் ப்ளூ டிக் சந்தாதாரர் முறையை நிறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.