மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ட்விட்டரின் ப்ளூ டிக் சேவை, வணிக நிறுவனங்களுக்கு தங்க நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம், அதன் ப்ளூ டிக் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா சேவை இணையத்தில் பயன்படுத்த $8 மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இல் $11 க்கு என நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வணிகக் கணக்குகளுக்கு தங்க நிற சரிபார்ப்புக் குறியீடு வழங்கபட்டுள்ளது.
தற்போது இந்த சேவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, வரும் காலங்களில் மேற்கொண்டு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரை எலான் மஸ்க் தன்வசப்படுத்திய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உறுதிப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு நீல நிறைகுறியீடு வழங்கப்பட்டு வந்தது, ஆனால் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் இருப்பதால் அதனை நீக்குவதற்கு மஸ்க், ட்விட்டரின் நீலக்குறியீடுக்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார்.
அதன்பிறகு தற்காலிகமாக நீல நிறக்குறியீடு வழங்கப்படுவதை நிறுத்தி வைத்திருந்தார். அதனை மீண்டும் தற்போது மஸ்க், புதிய நிறத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பல வணிக கணக்குகளுக்கு ட்விட்டரில் தங்க நிறத்தில் குறியீடு தெரிய ஆரம்பித்திருக்கும்.
ட்விட்டர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சந்தாதாரர் சேவையில், உங்களது கணக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின், பயனர்கள் டிவீட்களை திருத்திக்கொள்ளலாம், 1080பிக்ஸல்ஸ் தரத்துடன் கூடிய வீடியோ பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர் சந்தாதாரர்கள் தங்களது பயனர் பெயரை மாற்ற முடியாது.
ஆனால் மஸ்க் தெரிவித்துள்ள அறிக்கையின் படி விரைவில் பயனர் பெயரை மாற்றும் அப்டேட்களை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…