ட்விட்டர் மீண்டும் அறிமுகப்படுத்திய ப்ளூ டிக் சேவை தற்போது புதிய நிறத்தில்.!

Default Image

மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ட்விட்டரின் ப்ளூ டிக் சேவை, வணிக நிறுவனங்களுக்கு தங்க நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம், அதன் ப்ளூ டிக் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா சேவை இணையத்தில் பயன்படுத்த $8 மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இல் $11 க்கு என நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வணிகக் கணக்குகளுக்கு  தங்க நிற சரிபார்ப்புக் குறியீடு வழங்கபட்டுள்ளது.

தற்போது இந்த சேவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, வரும் காலங்களில் மேற்கொண்டு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரை எலான் மஸ்க் தன்வசப்படுத்திய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உறுதிப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு நீல நிறைகுறியீடு வழங்கப்பட்டு வந்தது, ஆனால் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் இருப்பதால் அதனை நீக்குவதற்கு மஸ்க், ட்விட்டரின் நீலக்குறியீடுக்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார்.

அதன்பிறகு தற்காலிகமாக நீல நிறக்குறியீடு வழங்கப்படுவதை நிறுத்தி வைத்திருந்தார். அதனை மீண்டும் தற்போது மஸ்க், புதிய நிறத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பல வணிக கணக்குகளுக்கு ட்விட்டரில் தங்க நிறத்தில் குறியீடு தெரிய ஆரம்பித்திருக்கும்.

ட்விட்டர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சந்தாதாரர் சேவையில், உங்களது கணக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின், பயனர்கள் டிவீட்களை திருத்திக்கொள்ளலாம், 1080பிக்ஸல்ஸ் தரத்துடன் கூடிய வீடியோ பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர் சந்தாதாரர்கள் தங்களது பயனர் பெயரை மாற்ற முடியாது.

ஆனால் மஸ்க் தெரிவித்துள்ள அறிக்கையின் படி விரைவில் பயனர் பெயரை மாற்றும் அப்டேட்களை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்