எலான் மஸ்க்கின் எக்ஸ், எவ்ரிதிங் ஆப் உடன் இணைந்துள்ளதாக ட்விட்டர் அறிவிப்பு.!

Default Image

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ எனப்படும் ‘எவ்ரிதிங் ஆப்’ உடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த வருடம் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அன்று முதல் ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளுக்கு கொடுக்கப்படும் ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் கட்டணம் செலுத்தும் முறை, என அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் எனப்படும் “எவ்ரிதிங் ஆப்” உடன் இணைந்துள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. நீதிமன்றத் தாக்கல் ஒன்றில், ட்விட்டர் இனி இல்லை என்பதை வெளிப்படுத்தியது. மேலும் அதன் சொத்துக்கள்  ‘எக்ஸ்’ கார்ப்பரேஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மஸ்க், நீண்டகாலமாக இது போன்ற விரிவான அம்சங்களை வழங்கக்கூடிய ஒரு பயன்பாட்டை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்தார். ட்விட்டர் போன்ற செயலி தான், எக்ஸ் தி எவ்ரிதிங் ஆப் செயலி உருவாக்குவதற்கான தூண்டுகோலாக அமைந்தது என மஸ்க் கூறியுள்ளார்.எலான் மஸ்க்கின் எக்ஸ், எவ்ரிதிங் ஆப் உடன் இணைந்துள்ளதாக ட்விட்டர் அறிவிப்பு.எலான் மஸ்க்கின் எக்ஸ், எவ்ரிதிங் ஆப் உடன் இணைந்துள்ளதாக ட்விட்டர் அறிவிப்பு.

கடந்த ஆண்டு மஸ்க், அமெரிக்காவிற்கான “சூப்பர் செயலி”யாக இருக்கும் ஒரு செயலியை உருவாக்கும் தனது விருப்பத்தைப் பற்றி குரல் கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, ட்விட்டரை அத்தகைய செயலியாக மாற்ற வேண்டும் அல்லது புதிதாக ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

ட்விட்டரை,எக்ஸ்’ கார்ப்பரேஷன் உடன் இணைப்பது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும், இது மஸ்க் கின் நீண்ட கால திட்டத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கும். அதாவது, Facebook, Instagram மற்றும் Snapchat போன்ற பிற சமூக ஊடகத் தளங்களுடன் போட்டியிடக்கூடிய, பல்வேறு அம்சங்களை வழங்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பயன்பாட்டை(செயலி) உருவாக்குவதே மஸ்கின் நீண்ட கால திட்டமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்