தலை ஒட்டி பிறந்த இரட்டையர்கள்! 33 மணி நேரம், 100 மருத்துவர்கள் ஈடுபட்ட அறுவை சிகிச்சை
பிரேசிலில் இணைந்த தலை மற்றும் மூளையுடன் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா 2018 ஆம் ஆண்டில் வடக்கு பிரேசிலில் உள்ள ரோரைமா மாநிலத்தில் தலை ஒட்டிய இரட்டையர்களாகப் பிறந்தனர்.
விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரேசிலில் உள்ள ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் 33 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரித்தெடுத்தனர். இந்த அறுவை சிகிச்சையில் 100 மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
லண்டனை சேர்ந்த மருத்துவ தொண்டு நிறுவனமான ஜெமினி அன்ட்வைட், இந்த அறுவை சிகிச்சையை செயல்படுத்த உதவியுள்ளது. மேலும் மருத்துவர்கள் கூறுகையில், “இது இன்றுவரை மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பிரிப்பு அறுவை சிகிச்சை” என்று கூறினார்கள், ஏனெனில் சிறுவர்கள் பல முக்கிய நரம்புகளால் இணைந்திருந்தார் என்றார்கள்.