துருக்கி நிலநடுக்கம் – முன்பே கணித்த ட்வீட் செய்த ஆராய்ச்சியாளர்..!

Default Image

டச்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட போவதை 3 நாட்களுக்கு(பிப்.3)  முன்பே கணித்துள்ளார். 

துருக்கியில் நேற்று மட்டும் 3-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியதோடு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ,துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடுமா என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 2-வது நாளாக துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டச்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட போவதை 3 நாட்களுக்கு(பிப்.3)  முன்பே கணித்து சொல்லியுள்ளார்.

இதுகுறித்து  ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில்,  துருக்கி, சிரியா, ஜோர்டான் மற்றும் லெபனானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்