TurkeySyriaEarthquakeLive: துருக்கியில் 6 வயது சிறுமியை காப்பாற்றிய மீட்புக்குழு..! அமித் ஷா பெருமிதம்..!

Default Image
துருக்கியில் 6 வயது சிறுமியை மீட்புக்குழு காப்பாற்றியுள்ளது :
பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் 6 வயது சிறுமியை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினரை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.

amitshah to stud

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 19,300-ஐ கடந்தது :

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் பல மாடிக் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தற்பொழுது இந்த பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19,300 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை ஜப்பானின் ஃபுகுஷிமா பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பலி எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியது :

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளது.

நிலைநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐ கடந்தது :

துருக்கி மற்றும் சிரியாவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் பல மாடிக் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. தற்பொழுது இரு நாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐத் தாண்டியுள்ளது.

turkey

2023-02-09 02:45 PM
ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்தது கேரள அரசு: 

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அறிவித்துள்ளார். கடந்த வாரம் கேரளா மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பதில் அளிக்கும் போது மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவை அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்வதாகவும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.

Finance Minister KN Balagopal
[Image Source : The Hindu]

2023-02-09 10:40 AM

சிரியாவிற்கு அவசர நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியது :

இந்தியா அனுப்பிய ஆறு டன்களுக்கும் அதிகமான அவசரகால நிவாரண உதவிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சென்றடைந்தன. இதில் மூன்று டிரக்-லோட் பாதுகாப்பு கியர், அவசரகால பயன்பாட்டு மருந்துகள், ஈசிஜி இயந்திரங்கள் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் அடங்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் பிறகு ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 11,000-திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

India provided emergency relief aid to Syria
[Image Source : Twitter/@pratyay_likhok]

2023-02-08 06:53 PM

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000-த்தை தாண்டியது : 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000-த்தை தண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியைச் சேர்ந்தவர்களில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Turkey and Syria earthquake 1

2023-02-08 03:00 PM
இறப்பு எண்ணிக்கை 10,000-த்தை நெருங்கியது :

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த இரண்டு நாட்களாக நான்கு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இடிபாடுகளை சிக்கிய மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இந்த இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 9,400-ஐக் கடந்துள்ளது.

2023-02-08 02:00 PM

துருக்கி
நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் இடிபாடுகளில் சிக்கி மரணம் :

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டின் நட்சத்தர கால்பந்தாட்ட வீரர் அஹ்மத் ஐயுப் துர்கஸ்லான் (Ahmet Eyup Turkaslan) கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

28 வயதான அஹ்மத், 2021 ஆம் ஆண்டு துருக்கியின் கால்பந்தாட்ட கிளப்பான யெனி மாலத்யஸ்போரில் (Yeni Malatyaspor) சேர்ந்ததில் இருந்து கிளப்பிற்காக ஆறு முறை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Ahmet Eyup Turkaslan
[File Image]

2023-02-08 01:20 PM

7,700-ஐ  தாண்டியது பலியானோர் எண்ணிக்கை:
துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் பலத்த நிலநடுக்கம் (5.6 ரிக்டர் அளவு) ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி 7,700 உயிரிழந்தனர். 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

2023-02-08 10:02 AM

$6.94 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி வழங்கும் ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியா அரசு செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற மனிதாபிமான முகமைகள் மூலம் முதற்கட்டமாக $6.94 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

2023-02-07 4:31pm

இரண்டாவது நாளாக கட்டுக்கடங்காமல் எரியும் தீ :

தென்கிழக்கு துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஸ்கெண்டெருன் துறைமுகத்தில் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து இரண்டாவது நாளாக கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

துருக்கிய கடலோர காவல்படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2023-02-07 4:20pm

உலக சுகாதார அமைப்பின் மீட்பு குழு விரைந்தது :

ஐக்கிய நாடுகள் சபையும் (UN) மற்றும் உலக சுகாதார அமைப்பும் (WHO) துருக்கி மற்றும் சிரியாவிற்கு அவசர சிகிச்சை குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்களை  மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனுப்பியுள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 த்தை கடந்தது:

5.6 ரிக்டர் அளவிலான புதிய நிலநடுக்கம் துருக்கியைத் தாக்கியது,இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 த்தை கடந்துள்ளது.

2023-02-07 2:04pm

துருக்கி நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் மாயம் :

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உதவிக்கரம்  நீட்டும் உலகநாடுகள்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆகியோர் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரூ.90 கோடி உதவித்தொகையாக அறிவித்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித டச்சு ஆராய்ச்சியாளர் 

டச்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட போவதை 3 நாட்களுக்கு(பிப்.3)  முன்பே கணித்து வரைபடத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிரியா சிறையில் இருந்து தப்பியோடிய 20 பயங்கரவாதிகள்

சிரியா  சிறையில் இருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் நிலநடுக்கத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடிய 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் விரைவில் கண்டுபிடிக்கபடுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம் – துருக்கி விரைந்த இந்திய மருத்துவ குழு 

துருக்கியில் நேற்று மற்றும் இன்று 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கதில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகிறது. இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.


துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் 

துருக்கியில் நேற்று மட்டும் 3-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4000-ஐ கடந்த பலி எண்ணிக்கை 

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நாடே குலுங்கியது, கட்டடங்கள் இடிந்து விழுந்து ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும்.

துருக்கியில் 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் 

துருக்கியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட  நிலையில், மதியம் 3:45 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தற்போது 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில், 6.0 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

சிரியா, துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. உயிரிழப்புகள்  வாய்ப்பு

துருக்கி, சிரியா இரு நாடுகளிலும் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே 1300 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 சிரியாவிலும் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

துருக்கி, சிரியா இரு நாடுகளிலும் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சற்றுமுன் துருக்கியில் சக்திவாய்ந்த நடுக்கம் ஏற்பட்டது.

தற்போது சிரியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டமாஸ்கஸ் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கில் இன்று காலை சாக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்காதால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் சிரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்விட் செய்த்துளளார்.அந்த பதிவில், இந்த பயங்கர நிலநடுக்கம் சிரியாவையும் பாதித்துள்ளது என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சிரிய மக்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் இந்த கடினமான நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்க உறுதியுடன் இருக்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1300-ஆக அதிகரிப்பு 

துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அந்த வகையில், 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் சிரியாவில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கத்தால் சேதமடைந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசிண்டாப் கோட்டை

துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால்  2,200 ஆண்டுகள் பழமையான காசிண்டாப் கோட்டை அழிக்கப்பட்டது.

ஈராக்கில் இருந்து துருக்கிக்கு எண்ணெய் கொண்டு செல்லும் கெர்குக்-செய்ஹான் குழாய் நிலநடுக்கத்திற்கு பின்னரும் எந்தவித பாதிப்பின்றி செயல்படுவதாக எரிசக்தி அதிகாரி  ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

2023-02-06 2:54 pm


அமெரிக்கா உதவ தயார் வெள்ளை மாளிகை அறிக்கை :

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று ஏற்பட்ட அழிவுகரமான பூகம்பத்தின் அறிக்கைகளால் அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

turkey earthquake building
An aerial view of debris as rescue workers conduct search and rescue operations in Osmaniye. Photograph: Anadolu Agency/Getty Images

நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்தது,பலி 640 ஆக உயர்வு :

நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை இடிந்த தரைமட்டமானதாகவும் இடிபாடுகளில் சிக்கி  குறைந்தது 641 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Turkey
People search through rubble in Diyarbakir, Turkey. Photograph: Sertaç Kayar/Reuters
உதவும் கிரீஸ் :

துருக்கியின் அண்டை நாடான கிரீஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர்.

உயரும் பலி எண்ணிக்கை:

நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளது இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது .நிலநடுக்கம் ஏற்ப்பட்ட பொழுது கட்டிடங்கள் அடியோடு சீட்டுகட்டுப்போல் விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல்:

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் “துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடமைச் சேதங்களால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். துருக்கி மக்களுக்கு இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது, மேலும் இந்த சோகத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. ,” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

பலி எண்ணிக்கை 250-ஐ கடந்தது.

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 195-ஆக உயர்வு.
  • துருக்கி மற்றும் சிரியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • அதன்படி, தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. 

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது.

Earth Quake 1

ந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.  கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை துருக்கியில் மட்டும், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியை தொடர்நது சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கட்டட்டங்கள் சேதமடைந்துள்ள நிலையில், 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் இடிபாடுகளில் சிக்கி மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO