துருக்கி நிலநடுக்கம் – கட்டட ஒப்பந்தக்காரர்கள் கைது..!

Default Image

துருக்கியில், சேதமடைந்த கட்டடங்களுக்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிக்கப்படும் 130 பேரை கைது செய்ய பிடிவாரண்ட் 

கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், இரு நாடுகளிலும், பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

turkeysyriaearthquake33

இந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதாபமான சூழலுக்குள் மக்கள்  தள்ளப்பட்டுள்ளனர். இருநாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,000-ஐ கடந்துள்ளது.

earthquake-hit Turkey

இந்த நிலையில், சேதமடைந்த கட்டடங்களுக்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிக்கப்படும் 130 பேரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி துணை அதிபர் ஃபுவாட் ஓக்டே கூறயிருந்த நிலையில், ஹடே மாகாணம், அன்டக்யா பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி அடுக்குமாடி கட்டடத்தின் ஒப்பந்ததாரர் வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சித்த போது இஸ்தான்புல் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்