சக்திவாய்ந்த நிலநடுக்கம்! தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
Tsunami Warning : சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானின் இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் இன்று (02.4.2024) ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
அதனை போலவே, தைவான் தலைநகர் தைபேயில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு இருக்கும் கட்டிடங்கள் சில சரிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
இதுவரை உயிர்சேதம் மற்றும் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும். இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை போல, 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
???? BREAKING: தைவான் நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
#TsunamiWarning ????#boxdel #LiemaPansti #จั๊กกะบุ๋ม #에이티즈 #오피셜리쿨_예담x윈터 #earthquake pic.twitter.com/wsofd8JOZU— தேவா (@gdeva88) April 3, 2024
இது தொடர்பாக ஜப்பான் வானிலை மையம் தகவல் தெரிவித்ததாவது “25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவான் அருகே இன்று அதிகாலை, 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் முற்கட்டமாக, 3 மீ., (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம்” என குறுள்ளது. மேலும், இதனையடுத்து ஜப்பானிலில் 3 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.