சுனாமி எச்சரிக்கை..! வானூட்டு தீவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
வானூட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது வானூட்டு நாடு. இதில் சுமார் 80 தீவுக் கூட்டங்கள் உள்ள நிலையில் நேற்று மாலை அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் லிட்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்கு உள்ள மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மேடான பகுதிகளில் தங்கி உள்ளனர். மேலும் மக்கள் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.