அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

நியாயமான தேர்தல் நடந்தால் தோல்வியை ஒப்புக் கொள்வேன் என்று டிரம்ப் கூறியுளளார்.

Trump

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் புளோரிடாவில் வாக்களித்த பிறகு, வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தனது ஜனநாயக போட்டியாளரான கமலா ஹாரிஸுக்கு எதிராக “ஒரு பெரிய பிரச்சாரத்தை” நடத்தினேன் என்று நம்புவதாக கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சம் மற்றும் வன்முறையைத் தவிர்க்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுப்பாரா என்று செய்தியாளர் கேட்டதற்கு, கேள்வியை விமர்சித்தார். தனது ஆதரவாளர்கள் வன்முறையாளர்கள் அல்ல எனவும், நாட்டில் எந்த வன்முறையும் நடக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப், தான் தோற்றால், நாடு ரத்தக்களரியாக மாறும் என தெரிவித்து இருந்தார். ஒருவேளை “நியாயமான தேர்தல் என்றால்” தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அதாவது, “நான் ஒரு தேர்தலில் தோல்வியடைந்தால், அது நியாயமான தேர்தல் என்றால், நான் அதை முதலில் ஒப்புக்கொள்வேன். இதுவரை அது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்,” டிரம்ப், பிரச்சார பாதையில் பல முறை பயன்படுத்திய எச்சரிக்கையை மீண்டும் கூறினார், செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்